பேராவூரணி தாலுக்கா பழைய பேராவூரணியை சார்ந்த ஆனந்தன் சதாசிவம் பிரியங்கா தம்பதியர் இல்ல காதணி விழா அழைப்பிதழ் பேராவூரணி பகுதியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த அழைப்பிதழில் அனைத்தும் தூய தமிழிலும், அம்பேத்கர் காரல் மார்க்ஸ் பெரியார் ஆகியோரின் சமதர்ம குறியீடுகளை தாங்கியும் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழ் முழுதும் கோட்டோவியத்தால் செம்மையாக வடிவமைக்கப்பட்டு பேராவூரணி பகுதி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் ஆர்வலரான ஆனந்தன் சதாசிவம் தனது குழந்தைகளுக்கு யாழிசை மற்றும் ஆதிரை எனப் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார். அவர்களது காதணி விழா, செவிப்பொன் சேர்ப்பு விழா என தலைப்பிட்டு, பேராவூரணி எஸ்டிடி திருமண மண்டபத்தில் எழுத்தாளர் திருநெல்வேலி சூர்யா சேவியர் முன்னிலையில் வருகிற வைகாசி மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை நடைபெற இருக்கிறது..