சேதுபாவாசத்திரம் வட்டார தமிழக வெற்றி கழகமும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இணைந்து நடத்திய ரத்த தான முகாம், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராமலிங்கம், பட்டுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் சீனிவாசன், மருத்துவர் ரேவதி மற்றும் மருத்துவ குழுவினர், தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட தலைவர் மதன், சேதுபாவசத்திரம் தெற்கு ஒன்றிய தலைவர் அருள்முருகன், பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பு முருகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் ராம்குமார், ஹரிகரன், ஜீவா முகுந்தன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 15 யூனிட் ரத்தம் தனமாக பெறப்பட்டது.