பேராவூரணி கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா

IT TEAM
0

 


தஞ்சாவூர், ஜூன்.3 - 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, பேராவூரணி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், 2024 -25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா, தஞ்சை மாவட்டம், பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு பொறிஞர் 

எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தார். பொறிஞர் டி.இளையராஜா வரவேற்றார். பொறிஞர்கள் ஏசிசி.ராஜா, சி.துரையரசன், எம்.ஜெயச்சந்திரன், 

என்.சரவணன், 

பி.கோவிதரன், டி.ஜெயக்குமார், 

கே.குட்டியப்பன், 

எஸ்.கலைச்செல்வம், 

எம்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


புதிய தலைவராக 

தஞ்சாவூர் எம்.திருப்பதி, செயலாளராக எம்.சந்திர மோகன், பொருளாளராக ஏ.சக்தி கணேஷ், கௌரவ தலைவராக ஏசிசி.ராஜா மற்றும் நிர்வாகிகள் பணியேற்றனர். முன்னாள் மாநிலத் தலைவர் ஆர். மோகன்ராஜ் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார். 


சிறப்பு விருந்தினர்களாக பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், கட்டுமானப் பொறியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் என்சையது ஷாகிர், மண்டலத் தலைவர் சி.துரையரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர். 


இதில், பொறியாளர்கள், லயன்ஸ், ரோட்டரி, வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top