தஞ்சாவூர், ஜூன்.26 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பயன்பாட்டுக்கு, பள்ளியின் முன்னாள் மாணவன் கா.சாய்சரண், பெற்றோர் செ.கார்த்திக், கா.ராஜாத்தி ஆகியோர் இணைந்து ரூபாய் 4,000 மதிப்புள்ள மேஜையை அன்பளிப்பாக வழங்கினர்.
அவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்
அன்பு மேரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி நா.பரிமளா, ஆசிரியர் நீலகண்டன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.