தஞ்சாவூர், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மு.கருணாநிதி (ஆவணம்), கு.மகேஸ்வரி (குருவிக்கரம்பை) ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வுகளில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சோ.வைரவன் (குருவிக்கரம்பை), வத்சலா முத்துராமன் (ஆவணம் - பெரியநாயகிபுரம்), ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் அன்சத் நிஷா அபுபக்கர் (ஆவணம்), இந்திரா வைரவன் (குருவிக்கரம்பை), ஒன்றியக்குழு உறுப்பினர் அருந்ததி ரவிச்சந்திரன், குருவிக்கரம்பை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கி.வைரவன், துணைத் தலைவர் கு.சின்னப்பா, பொருளாளர் எஸ்.முத்துவேல், ஆவணம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே. அடைக்கலம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள் சபீலா (ஆவணம்), டி.நளாயினி (குருவிக்கரம்பை) ஆவணம் துணைத் தலைமை ஆசிரியர் சி.செல்வம், ஆவணம் தங்கவேல், குருவிக்கரம்பை அய்யாத்துரை, மதன், வெங்கடேஸ்வரன், ஏகாம்பரம், இலக்குவன், பாவேந்தன், டாக்டர் எஸ்.பிரபாகரன், குருவிக்கரம்பை ஆசிரியர் க.செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குருவிக்கரம்பை பள்ளியில் 102, ஆவணம் பள்ளியில் 40 மிதிவண்டிகள் என மொத்தம் 142 விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.