பேராவூரணி, அக் 18
சேதுபாவாசத்திரம் சுற்றுப் பகுதிகளில் அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை பேராவூரணி சேது ரோடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், ஆத்தாளூர், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், பள்ளத்தூர், குப்பதேவன், திருவத்தேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.