பேரைத் துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், பேராவூரணி அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 25000 மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டது. பேராவூரணி அரசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், தனியார் பள்ளிகள் சங்க மாநில தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். பேரை துளிர் அறக்கட்டளை தலைவர் விஆர்ஜி. நீலகண்டன், மாணவர்களை வாழ்த்தி, அறக்கட்டளையின் நோக்கங்கள் குறித்தும், அறக்கட்டளை செய்து வரும் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார். நிகழ்வில், அறக்கட்டளையின் செயலாளர் மகாராஜா, பொருளாளர் செந்தில்குமார் முன்னாள் பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன் வன்மீகநாதன் பேராசிரியர் மணிகண்டன் உள்ளிட்டோர் அறக்கட்டளையின் சார்பில் கலந்து கொண்டனர். நிகழ்வில், திரளான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.