பேராவூரணியில் பாஜ சார்பில் நிர்வாககுழு கூட்டம் நடந்தது.
மாநில கூட்டுறவு பிரிவு செயலர் குகன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலர் வீரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பூத்கமிட்டி தலைவர்கள் பேராவூரணி தெற்கு ஒன்றிய தலைவரை போட்டியின்றி ஒருமனதாக இரண்டாவது முறையாக வீரப்பனை தேர்வு செய்தனர். இதில் மாவட்ட செயலர் சக்கரவர்த்திசெந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியநாயகி, மாவட்ட பிரதிநிதி நீலகண்டன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் வீரப்பன் நன்றி கூறினார்.