பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் ஸ்ரீசர்வசித்தி ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு மஹாயாகம் நடந்தது.
வாத்தலைக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீலெட்சுமி நரசிம்மர், ஸ்ரீவாராகி அம்மன் திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் சர்வசித்தி ஆஞ்சநேய சுவாமிக்கு தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீஹனுமன் மூலமந்த்ர மஹாயாகம் நடைபெற்றது. ஸ்ரீசர்வசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு மஹா அபிஷேகம், கோ பூஜை, அலங்காரம் கூட்டு வழிபாடு, அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வாத்தலைக்காடு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.