பேராவூரணியில் மின்பணியாளர்களுக்கான பாதுகாப்பு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. நிகழ்வுக்கு பேராவூரணி உதவி செயற்பொறியாளர் எஸ் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். உதவி மின் பொறியாளர்கள் பேராவூரணி நகர் ஹரி சங்கர், பூக்கொல்லை பிரபாகரன், திருச்சிற்றம்பலம் திருச்செல்வம், குருவிக்கரம்பை மனிஷா, நாடியம் சிவசங்கர் மற்றும் ஆக்க முகவர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், கேங் மேன் என திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசிய உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன், மின் பணியாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள், மின்தடைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். உதவி மின் பொறியாளர்கள், ஏற்கனவே நடைபெற்ற மின் விபத்துகள் குறித்தும் அதன் மூலம் பெற்ற அனுபவங்கள் குறித்தும் கருத்துரை வழங்கினர். நிகழ்வில், சிறப்பாக பணிபுரியும் மின் பணியாளர்கள் சிறப்பித்துக் கௌரவிக்கப்பட்டனர்.