கீரனூரில் நடைபெற்ற மண்டல பகிர்வு மாநாட்டில், பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் தனது சேவைக்காக மண்டல மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். இது குறித்து, சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், எங்கள் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்த செயலாளர் குமரன், பொருளாளர் ரவி, சாசனத் தலைவர் எம்.நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், சாசன செயலாளர் ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன், மாவட்ட தலைவர் பொறியாளர் இளங்கோ, மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், முதல்நிலைத் தலைவர் ராஜ்குமார், சங்கத்தின் வருங்கால பொறுப்பாளர்கள், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறேன்" என்றார்.