கடந்த 05.01.2025 அன்று கீரனூரில் நடைபெற்ற மண்டல பகிர்வு மாநாட்டில், பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் நா.ப. ரமேஷ் அவர்களுக்கு பொதுநல சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பேராவூரணி பகுதியில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு மக்கள் பணிகளை செய்தமைக்காகவும், குறிப்பாக பசித்தோருக்கு உணவு வழங்கல், கண் பரிசோதனை முகாம், மரக்கன்றுகள் வழங்குதல்,இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வுக்காக ஹெல்மெட் வழகியது, காது கேளாதவருக்கு காது கேட்கும் கருவி வழங்கியது, ஏழைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கியது, நீட் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தந்தது, போன்ற எண்ணற்ற பணிகளை செய்தமையை பாராட்டி இவ்விருது வழங்கி பாராட்டப்பட்டார்.