தஞ்சாவூர், பிப்.25 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடியில், அய்யனார் கோவில் இணைப்பு சாலை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டு அமைக்கப்படுகிறது.
இதேபோல், ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சமையல் கூடம் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
இரு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமையன்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கா.செல்வேந்திரன், மா.சாமிநாதன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் வி.பாரதிதாசன், கல்விப் புரவலர் சுப.சேகர் வட்டாரக் கல்வி அலுவலர் கலா ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு மேரி, ஆசிரியர் நீலகண்டன், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.