ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பில் தமிழக முதல்வர் தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

IT TEAM
0

 



பேராவூரணி, பிப் 16

பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பில் தமிழக முதல்வர் தேர்தலுக்காக வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.




வட்டார தலைவர் நாவலரசன் தலைமை வகித்தார், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் தமிழரசன் வரவேற்றார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இளமதியன் துவக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தாமரைச்செல்வன் கோரிக்கைளை உரையாற்றினார்.





ஆர்ப்பாட்டத்தில், 1.4.2003 பிறகு அரசு பணியில் சேர்ந்தவருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே அமல்படுத்திட வேண்டும்.


காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.


பள்ளி அனைத்து வகை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக்கப்பட வேண்டும்.


தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்:243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


அனைத்து வகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு(சி.ஏ.எஸ்) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top