திருச்சிற்றம்பலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

IT TEAM
0

  



தஞ்சாவூர், அக்.11 - 

தஞ்சையில் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 


பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 


சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் அன்பழகன், உதவி திட்ட அலுவலர் நவீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 


முகாமில், இருதயம், நரம்பியல், சர்க்கரை, நுரையீரல், பல், மனநலம், குழந்தைகள் நலம், எலும்பு மூட்டு பிரிவு, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பயனாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். தேவையானவர்களுக்கு இசிஜி, எக்கோ, சர்க்கரை, எக்ஸ் ரே, சளி, மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனைகள் செய்யப்பட்டது. 


முகாமில், 435 ஆண்கள், 538 பெண்கள் என மொத்தம் 973 மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு தங்கள் உடல்நலனை பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 74 பேருக்கு அடையாள அட்டைகளை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பயனாளிகளுக்கு வழங்கினார். 


இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிறைவாக, டாக்டர் சரண்யா ரஞ்சித் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top