பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

IT TEAM
0

 


பேராவூரணி ரோட்டரி சங்கம், கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு ரோட்டரி சங்க தலைவர் சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். சங்க செயலாளர் கேஎஸ்.நீலகண்டன், பொருளாளர் பி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஆளுநர் ராமதாஸ் மற்றும் பாஸ்கர், ஆறுமுகம், சந்திரபோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சிறப்பு கண் மருத்துவர் சிவதாரணி மற்றும் குழுவினர் முகாமை நடத்தினர். நிகழ்வில், பேராவூரணியில் உள்ள அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில், 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். நிறைவாக ரோட்டரியின் மருத்துவ திட்ட தலைவர் கே.ஆர்.கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பேராவூரணி ரோட்டரி சங்க தலைவர் சிவ.சதீஷ்குமார் சிறப்பாக செய்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top