பேராவூரணி கருணாமூர்த்தி காய்கறி கடை அருகில் வேம்பங்குடி தேங்காய் வியாபாரி பாண்டியன் அவர்கள் ரொக்க பணம் 78 ஆயிரம் ரூபாயை தவற விட்டு சென்றார். எதர்ச்சியாக அதை பார்த்த சீனி பத்தர், வீரா என்ற வீரசிங்கம், மாணிக்க பத்தர், பாலமுருகன், கலியமூர்த்தி ஆகியோர் மற்றும் அதை எடுத்து பேராவூரணி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்படி எதிர்பாராத விதமாக கருணாமூர்த்தி காய்கறி கடை உரிமையாளர் ஜெய்சங்கர் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை பார்த்த பொழுது, வேம்பங்குடி தேங்காய் வியாபாரி தவறவிட்டு சென்றது பதிவாயிருந்தது. அந்த கார் நம்பரை வைத்து, அருகே உள்ள டாக்ஸி மார்க்கெட்டில் டிரைவர்கள் கேசவன், மற்றும் நீலகண்டன் இருவரின் உதவியுடன், வாகன பதிவு என்னை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்து, அவர்களுக்கு தகவல் சொல்லி, பேராவூரணி ஜி2 காவல் நிலையம் வரவைத்து 78 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
