பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே இயங்கி வரும் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொ) ராணி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவர் காந்தி, சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ்சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர். முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இதில் 55 யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்து. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜ்மோகன், பழனிவேலு செய்திருந்தனர்.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு சார்பில் ரத்ததான முகாம்.
January 09, 2017
0
Tags
Share to other apps