தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அமேசான், பிளிப்கார்ட் அதிரடி ஆப்பர்.

Unknown
0


இந்தியாவி்ன் முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் பண்டிகை கால விற்பனையை விரைவில் துவங்க இருக்கின்றன. வார இறுதியில் துவங்கப்பட இருக்கும் பண்டிகை கால விற்பனையில் பல்வேறு பொருட்ள் மற்றும் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் மற்றும் விலை குறைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சார்ந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

விற்பனை தேதி:

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் பண்டிகை கால விற்பனை அக்டோபர் 14-ம் தேதி துவங்குகிறது. பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 14-இல் துவங்கி அக்டோபர் 17-ம் தேதி வரையிலும், அமேசான் தளத்தில் அக்டோபர் 14-ம் தேதி துவங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விற்பனை மதிப்பு:

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் இணைந்து நடத்திய பண்டிகை கால விற்பனைகளில் சுமார் 45 கோடி அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பரில் பிளிப்கார்ட் நடத்திய பிக் பில்லியன் டே விற்பனையில் 70 முதல் 80 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் சாதனை:

அதிகப்படியான பண்டிகைகள் நிறைந்த இந்த மாதத்தில் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகளவு விற்பனையை இரண்டு தளங்களும் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதே அளவு விற்பனை தீபாவளி நிறைவுறும் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிக்கம்:

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நட்த்திய விற்பனைகளில் இந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் அதிகளவு விற்பனையை செய்திருப்பதாகவும், குறிப்பாக ஸ்மார்ட்போன் விற்பனை மூலம் அமேசானை பிளிப்கார்ட் முந்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் சலுகைகள்:

இரண்டாம் கட்ட பண்டிகை கால விற்பனையில் ஸ்மார்ட்போன்களுடன், தொலைகாட்சி சாதனங்களுக்கும் அதிகப்படியான சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் சார்பில் வியப்பூட்டும் சலுகைகள் வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஐபோன் விற்பனை:

அமேசான் தளத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை தயார் நிலையில் வைத்திருக்க அமேசான் தனது விநியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் நான்கில் ஒரு ஸ்மார்ட்போன் ஐபோனாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி தொலைகாட்சி மற்றும் இதர சாதனங்களுக்கும் முந்தைய விற்பனையில் வழங்கப்பட்டதை போன்ற சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போட்டி:

பிளிப்கார்ட் தளத்தில் மின்சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான சலுகைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பிளிப்கார்ட் தளத்தில் அதிகபட்சம் 70 சதவிகிதம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top