ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு.
அக்டோபர் 13, 2017
0
ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகையாக தண் தணா தண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கேஷ்பேக் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கும், இவற்றை தொடர்ந்து அடுத்த ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும்.
அக்டோபர் 12-ம் தேதி துவங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படும் இந்த சலுகையை பெற ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த சலுகை கூப்பன்களை நவம்பர் 15-ம் தேதி முதல் ஒரு நேரத்தில் ஒரே கூப்பன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஜியோ சலுகைகளின் காலாவதியைப் பொருத்து தீபாவளி சலுகை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு, அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டம் நிறைவுற்றதும் புதிய தண் தணா தண் வேலிடிட்டி துவங்கும். அதாவது நவம்பர் 12-ம் தேதி உங்களது தற்போதைய திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் தீபாவளி சலுகை அதே நாள் முதல் ஆக்டிவேட் ஆகும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க