சென்னை சூப்பர் கிங்ஸில் மீண்டும் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவும் இடம்பிடித்தார்.

Unknown
0
ஐபிஎல் 2018 போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதையடுத்து சூதாட்டப் புகார் குறித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் விளையாட தடை விதித்தது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன.

இதற்கிடையே தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து எந்த 3 பேரை சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை அணி மீண்டும் தக்க வைத்தது. இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். மேலும் ரிஷப் பந்தும் தொடர்ந்து டெல்லியில் அணியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்கவைத்துள்ளது. அவர்களின் விவரம் வருமாறு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஏ.பி.டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான்

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா

கொல்கட்டா நைட்ரைடர்ஸ்: சுனில் நரேன், ஆண்ட்ரூ ரஸல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித்

கிங்ஸ்லெவன் பஞ்சாப்: அக்ஸர் படேல்

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top