
பேராவூரணி அடுத்த விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம் நிறைவு.
January 01, 2018
0
விளங்குளம் அபிவிருத்தி நாயகி உடனுறை அட்சயபுரீஸ்வரர் கோயில் (மங்களசனீஸ்வரர் கோயில்) புகழ் பெற்ற பரிகாரத்தலமாகும். பூசநட்சத்திரத்தில் பிறந்தோருக்கான சிறந்த வழிபாட்டு தலமாகவும், அட்சயதிரிதியை தலமாகவும் விளங்குகிறது.மணக்கோலத்தில் மங்களசனீஸ்வரராக தென்திசை நோக்கி அமர்ந்து திருநள்ளாறுக்கு அடுத்த படியாக தஞ்சை மாவட்டத்தில் தனிச்சன்னதி கொண்டு, விளங்குளத்தில் அருள் பாலித்து வரும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். சனிப்பெயர்ச்சியையொட்டி கடந்த மாதம் 24 ம்தேதி லட்சார்சனையும் அதனை தொடர்ந்து 30,31 ம்தேதி ஆகிய இருதினங்கள் பரிஹாரஹோம நிகழ்ச்சியும் நடைபெற்றது.ஹோம நிகழ்ச்சியின் நிறைவாக மங்கள சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரி சனம் செய்தனர்.

Tags
Share to other apps