ஆதார் இணைக்காவிட்டால் கேஸ் கிடையாது.

Unknown
0
மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மத்திய, மாநில அரசு மானியம் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் மானியம் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆதார் எண்னை இணைத்துள்ளனர்.

சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகளை தடுக்க ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் சமையல் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் வருகிற மார்ச் 31 ஆம தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இல்லையென்றால் சமையல் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் தங்களது விவரங்களை சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் சிலிண்டர்கள் வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top