பேராவூரணி அடுத்த விளங்குளத்தில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பு.

Unknown
0
பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதி1,153 குடியிருப்புகளுக்கு, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், கூட்டுக்குடிநீர் திட்ட வழிகளை கண்காணிக்க வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அய்யனான் (ஒருங்கிணைப்பாளர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி குமரவடிவேல், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் பேராவூரணி பொன்னுசாமி, பெருமகளூர் யசோதா, காவல்துறை உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையால் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே பேராவூரணி விளங்குளம் பகுதியில் மர்மநபர்கள் சிலர், கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயை உடைத்து, ஏரிக்கு தண்ணீர் பாய்ச்சுவதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினருடன் சென்ற வட்டாட்சியர் ஆய்வு செய்து கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பை சரி செய்தார். குடிநீர் வடிகால் வாரிய இளநிலைப் பொறியாளர் தங்கவேலு, வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் ஆய்விற்கு சென்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயை உடைத்து முறைகேடாக தண்ணீரை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.



நன்றி:தீக்கதீர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top