பேராவூரணி அடுத்த ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயிலில் ஆனி பெருந் திருவிழா ஜூலை 10 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்துத் துறை அலுவலர்கள், கிராமத்தினர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. திருக்கோயில் செயல் அலுவலர் பி.எஸ்.கவியரசு முன்னிலை வகித்தார்.களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராம பிரமுகர்கள், காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரமேஷ், தீயணைப்புத் துறை அலுவலர் செல்வராஜ், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி குடிநீர், கழிவறை, சுகாதாரம், பாதுகாப்பு, பேருந்து வசதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தங்குதடையின்றி மின்வசதி கிடைத்திட ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது.
பேராவூரணி அடுத்த ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயிலில் ஆனி பெருந் திருவிழா ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்.
July 05, 2018
0
Tags
Share to other apps