மேலமணக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கல்வி உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்.

0
பேராவூரணி அடுத்த மேலமணக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கினர். விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மா.க.ராமமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் சு.சகுந்தலா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் மு.மகேந்திரன் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் ராமதாஸ், அருள்தாஸ், அன்புக்கரசன், கலாநிதி, கலையரசன், சத்தியமூர்த்தி, இளையபாரதி, முருகேசன், நீலகண்டன், ராஜதுரை, அருண், ரகுநாத், சர்மதன் ஆகியோர் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பீரோ, மேஜை, நாற்காலி, சேர் உள்ளிட்டவற்றை வழங்கினர். விஜயகுமார், செல்வராஜ், மோகன்தாஸ், பிரகலாதன், ஆறுமுகம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை நர்மதா நன்றி கூறினார்.Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top