பேராவூரணி ஆவணம் சின்னக்குளத்தை தூர்வாரி சீரமைத்த இளைஞர்கள்.

0

பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஆவணம் பெரியநாயகிபுரம் கிராம பள்ளிவாசல் தெருவில் சின்ன க்குளம் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 3 ஏக்கர். இந்த குளம் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களால் நிரம்பி தொற்று நோய்கள் பரப்பும் இடமாகவும் இருந்தது. இந்தக் குளத்தினை தூர்வாரி சீரமைத்து தரவேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் ஆவணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரியாஸ், ஹைருல், மகாதிர், உமர், மர்ஜூக், திவான், நதீம் ஆகியோர் மக்களிடம் நன்கொடை பெற்று 3.8 லட்சம் ரூபாய் செலவில் ஆவணம் சின்னக்குளத்தை தூர்வாரி படித்துறைகள் அமைத்தனர். தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் சின்னக்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இளைஞர்களின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top