பேராவூரணியில் திருவள்ளுவர் தினத்தன்று மட்டும்திருக்குறள் பெருமையை சொல்லி கடந்த 20 ஆண்டுகளாகஒரு ரூபாய்க்கு தேநீர்.

0

பேராவூரணியில் திருவள்ளுவர் தினத்தன்று மட்டும்திருக்குறள் பெருமையை சொல்லி கடந்த 20 ஆண்டுகளாகஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்து வருகிறார் திருக்குறள் ஆர்வலர் ஒருவர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார் (70). பேருந்து நிலையம் அருகே கடந்த பலவருடங்களாக தேநீர் கடை நடத்தி வருகிறார். இவர் திருக்குறள் மீது கொண்ட பற்றினாலும், உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தியும், பல ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டும் கஜா புயலால் இப்பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட போதிலும், திருவள்ளுவர் தினமான புதன்கிழமை அன்று ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கினார். திருக்குறள் ஆர்வலரான இவரது கடையிலேயே ஏராளமான நூல்கள் கொண்ட நூலகத்தையும் வைத்துள்ளார். அத்துடன் மாணவர்களுக்கு திருக்குறள் பற்றிய வகுப்புகளை எடுத்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். இவரது கடையின் வாசலில் கரும்பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி அதன் பொருள் விளக்கம் எழுதி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவ் வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதனைதினந்தோறும் படித்துச் செல்வது வழக்கம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top