பட்டுக்கோட்டை-திருத்துறைப்பூண்டி-திருவாரூர்- இடையே 2-வது கட்டமாக ரயில் சோதனை ஓட்டம்.

IT TEAM
0

பட்டுக்கோட்டை- திருவாரூர் வழித்தடத்தில் 2-வது கட்டமாக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் வரும் மார்ச் 31-க்குள் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த மார்ச் 9 ஆம் தேதி தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஏ.கே.மிஸ்ரா தலைமையில் ரயில் என்ஜின் மூலம் ஆய்வுப் பணியை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 2-வது கட்டமாக திருவாரூர், திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வரையிலான பாதையில் உள்ள தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், ரயில்வே கேட்டுகள், கேட் கீப்பர் அறைகள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம், துணைத் தலைவர் கா.லெட்சுமி காந்தன், துணைச் செயலாளர் ஜெ.பிரின்ஸ் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு ரயில் மீண்டும் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top