தமிழை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்- தமிழ் நாள்காட்டி அறிமுக விழாவில் பேராவூரணி வட்டாட்சியர் பேச்சு.

IT TEAM
0



தமிழை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்- தமிழ் நாள்காட்டி அறிமுக விழாவில் பேராவூரணி வட்டாட்சியர் பேச்சு.

தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் நாள்காட்டி அறிமுக விழா நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்பத்தமிழர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர் எச் சம்சுதீன் தமிழ் நாள்காட்டியை வெளியிட பேராவூரணி வட்டாட்சியர் த சுகுமார் நாள்காட்டியை பெற்றுக்கொண்டார். 


பேராவூரணி வட்டாட்சியர் தனது உரையில், "தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் இருபத்தி மூன்று ஆண்டுகளாக வெளியிடப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் நாள்காட்டி இன்னும் அதிக மக்களிடம் சென்று சேர வேண்டும். தமிழ் நாள்காட்டி என்பது ஒரு கருத்தின் அடிப்படையிலான படைப்பு. அது அறிவியல் வழியில் ஆனது. இந்தப் படைப்பை ஆதரிப்பதும் பயன்படுத்துவதும் ஒவ்வொரு தமிழரும் செய்ய வேண்டிய கடமையாகும். நல்ல படைப்புகளை சமூகம் பயன்படுத்தப் பழக வேண்டும். இதனால் நல்ல படைப்புகள் சமூகத்தில் நின்று நிலவும்" என்றார். 


 பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ப. சண்முகப்பிரியா "ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தமிழ் நாள்காட்டி யையும் சேர்த்து மக்களுக்கு வழங்க வேண்டும்" என்றார். 


நிகழ்வில் தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், திராவிடர் விடுதலை கழக மாவட்டச் செயலாளர் சித திருவேங்கடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வீரப்பெருமாள், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம்,  வீ.சோமசுந்தரம்,  கோ.செந்தில்குமார், சு.உமா,  அறநெறி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் த.ஜேம்ஸ், ஆலமரத்து விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி, தலைமையாசிரியர் சித்ராதேவி,  ஆசிரியர்கள் சுபாஷ், சுபா,  சிங்காரவேலு, காஜா முகைதீன், வெற்றிவேல், எழுத்தாளர் கான்முகமது, கவிஞர் நிலவன், மருத்துவர் அருண் சுதேஷ், ஊமத்தநாடு த. மூர்த்தி உள்ளிட்ட  பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். 


நிகழ்வுகளை தமிழ்வழிக் கல்வி இயக்க இணைச்செயலாளர் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் தொகுத்தளித்தார். 


 இயக்கத்தின் மாவட்ட செயலாளர் த.பழனிவேல், பாரதி ந. அமரேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


முன்னதாக தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் செ.சிவக்குமார் வரவேற்றார், நிறைவாக ரெட்டவயல் இரா.மாரிமுத்து நன்றி கூறினார்.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top