பேராவூரணி பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவு.

Unknown
0உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன்(அக்.,24) முடிவடைகிறது. நாளை முதல் தனி அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். தமிழகத்திலுள்ள 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்., மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர். அவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் இன்றுடன்(அக்.,24) முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்., 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை சென்னை ஐகோர்ட் தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு வரும் டிச., 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதற்கான மேல்முறையீடு வழக்கை விசாரித்து வரும் ஐகோர்ட், உள்ளாட்சி தேர்தல் தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. @sutitle@தனி அதிகாரிகள் :@@sutitle@@இதனையடுத்து உள்ளாட்சி நிர்வாகங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டும். எனவே, இன்று மாலைக்குள் தனி அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இவ்வாறு, நியமிக்கப்படும் தனி அதிகாரிகள் நாளை முதல் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பை ஏற்பார்கள். இவர்கள் டிச., 31ம் தேதி வரை அல்லது தேர்தல் நடைபெறும் நாள் வரை பதவியில் இருப்பார்கள்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top