நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் புகைப்படத் தொகுப்பு.

Unknown
0

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பங்குனி திருவிழா ;புதுக்கோட்டை அடுத்த நார்த்தாமலையில் மிகவும் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 26- ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து 2-ம் தேதி முத்துமாரியம்மனுக்கு காப்புகட்டுதல் நடந்தது. அதையொட்டி மண்டகப்படியுடன் தொடங்கி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், தினமும் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று பொங்கல் விழா நடந்தது. அதனை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்புவழிபாடு நடைபெற்றன.
இதில் புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், மற்றும் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால் குடம், தீச்சட்டி எடுத்துவந்து, முத்துமாரியம்மன்கோவில் சிறப்பு வழிபாடு நடத்தி நேர்த்திகடனை செலுத்தினர். இதே போல் திராளான பக்தர்கள் அலகு குத்தியும், மயில்காவடி, வேல்காவடி, மயில்ஆட்டம், ஒயிலாட்டம் போன்றவைகளும், பல தம்பதிகள் கரும்பில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை கோவிலுக்கு மேள தாளங்கள் வாண வேடிக்கைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
சிறப்பு வாழிபாடு ;
நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவில் தேர்திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை, கீரானூர், அன்னவாசல், இலுப்பூர் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்த ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தண்ணீர், மோர், உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தேரோட்டம் ;
இதை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. முதலில் தேரில் அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வந்தடைந்தது.
கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு (திங்கள் கிழமை) நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
அதனை தொடர்ந்து 2-ம் தேதி முத்துமாரியம்மனுக்கு காப்புகட்டுதல் நடந்தது. அதையொட்டி மண்டகப்படியுடன் தொடங்கி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், தினமும் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதனை தொடர்ந்து நேற்று பொங்கல் விழா நடந்தது. அதனை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்புவழிபாடு நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், மற்றும் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால் குடம், தீச்சட்டி எடுத்துவந்து, முத்துமாரியம்மன்கோவில் சிறப்பு வழிபாடு நடத்தி நேர்த்திகடனை செலுத்தினர். இதே போல் திராளான பக்தர்கள் அலகு குத்தியும், மயில்காவடி, வேல்காவடி, மயில்ஆட்டம், ஒயிலாட்டம் போன்றவைகளும், பல தம்பதிகள் கரும்பில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை கோவிலுக்கு மேள தாளங்கள் வாண வேடிக்கைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். சிறப்பு வாழிபாடு ; நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவில் தேர்திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை, கீரானூர், அன்னவாசல், இலுப்பூர் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்த ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தண்ணீர், மோர், உள்ளிட்டவை வழங்கப்பட்டது.தேரோட்டம் ; இதை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. முதலில் தேரில் அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வந்தடைந்தது. கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு (திங்கள் கிழமை) நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top