பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் ரூ.106 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய துறை முகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பழைய துறைமுகம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் போதிய வசதிகள் இல்லை எனவும், நெருக்கடியாக இருப்பதாகவும், நவீன முறையில் புதிதாக துறைமுகம் அமைத்து தரவேண்டும் எனவும் இப்பகுதி மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மல்லிப்பட்டினத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில், துறைமுக மேம்பா ட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. இதையடுத்து துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் துறைமுகம் அமைக்கும் பணிகள் தாமதப்பட்டு வந்தது.
உடனடியாக துறைமுகம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து, போராட்டம் நடத்தின.
இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மா.கோவிந்தராசு தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மல்லிப்பட்டினம் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்துவேன் என உறுதியளி த்திருந்தார்.
இந்நிலையில் துறைமுக விரிவா க்கப் பணிக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு ள்ளதாகவும், விரைவில் சில தினங்களில் பணிகள் தொடங்கும் என சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தெரிவித்தார்.
துறைமுகப் பணிகள் தொடங்கும் என்ற அறிவிப்பிற்கு இப்பகுதி மீனவ மக்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நன்றி:தீக்கதிர்