பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் -இரண்டாம்புலிக்காடு சாலையில் புதிதாக இரண்டு மதுக்கடைகள் அமைத்துள்ளதைக் கண்டித்தும், அக்கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், மல்லிப்பட்டினம் மற்றும் இரண்டாம்புலிக்காடு பொதுமக்கள், மீனவர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுவரை மதுக்கடைகள் அகற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து மே 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், இரண்டாம்புலிக்காடு கடைத்தெருவிலும் (சேதுபாவாசத்திரம்- பட்டுக்கோட்டை சாலை) மற்றும் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் சாலை மறியல் நடைபெறும் எனவும், இரண்டாம்புலிக்காட்டில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பா.சண்முகநாதன் தலைமையிலும் மல்லிப்பட்டினத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத்தலைவர் கே.என். செரீப், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் ஏ.தாஜூதீன் தலைமையில் மறியல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர்