மஹேந்திரா நிறுவனத்தின் முதல் தானியங்கி டிராக்டர் அறிமும்.
செப்டம்பர் 21, 2017
0
மஹேந்திரா நிறுவனத்தின் முதல் தானியங்கி டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள மஹேந்திரா ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட புதிய தானியங்கி டிராக்டர் 2018-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தானியங்கி டிராக்டரில் உள்ள ஆட்டோ ஸ்டீர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் சார்ந்த தொழில்நுட்பம் டிராக்டரை சீராக இயக்க வழி செய்கிறது. வயலில் தொடச்சியான செயல்பாட்டின் போது தேவையான இடங்களில் தானாக ஸ்டீர் செய்து கொள்ள ஆட்டோ-ஹெட்லேண்ட் டர்ன் அம்சம் ஓட்டுநரின் உதவியின்றி தொடர்ச்சியாக எவ்வித சிக்கலும் இல்லாமல் சீரான பாதையில் இயக்க வழி செய்யும்.
மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள ஆட்டோ இம்ப்லிமெண்ட் அம்சம் டிராக்டரில் உள்ள உபகரணங்களை தேவையான போது தரையில் இருந்து எடுத்து பின் மீண்டும் அதனை பூமியில் செலுத்தும் வசதியை வழங்குகிறது. இத்துடன் ஸ்கிப் பாசிங் அம்சம் ஓட்டுநரின் குறுக்கீடு இன்றி டிராக்டரை தொடர்ச்சியாக இயக்க வழி செய்யும்.
கூடுதலாத புதிய தானியங்கி மஹேந்திரா டிராக்டரில் பிரத்தியேக பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள ஜியோஃபென்ஸ் லாக் அம்சம் டிராக்டர் வயலின் வெளியே செல்லாமல் தடுக்கும். டேப்லெட் யூசர் இன்டர்ஃபேஸ் மூலம் கட்டுப்படுத்த கண்ட்ரோல் வியா டேபலெட் யூசர் இன்டர்ஃபேஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் கொண்டு உழவரின் வெவ்வேறு இயக்கத்தை செட் செய்து கொண்டு டிராக்டர் சீராக இயங்க வைக்க முடியும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சரியாக பயணிக்க இந்த அம்சம் வழி செய்யும். இத்துடன் டேப்லெட் சாதனம் கொண்டு டிராக்டரை கட்டுப்படுத்த முடியும். ஆபத்து காலத்தில் டிராக்டரை உடனடியாக நிறுத்த ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க