வரலாற்றில் இன்று செப்டம்பர் 20.

Unknown
0
செப்டம்பர் 20 (September 20) கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1187 – சலாதின் ஜெருசலேம் மீதான தாக்குதலை ஆரம்பித்தான்.
1519 – பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
1633 – சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார்.
1697 – ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், புனித ரோமப் பேரரசு டச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1847 – நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
1854 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படையினர் கிறிமியாவில் இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர்.
1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.
1878 – த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
1945 – மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
1976 – துருக்கியில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 155 பேரும் கொல்லப்பட்டனர்.
1977 – வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
1979 – மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பேரரசன் முதலாம் பொக்காசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1984 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

பிறப்புக்கள்

1924 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2014)
1940 – டாரோ ஆசோ, சப்பானிய அரசியல்வாதி
1946 – மார்க்கண்டேய கட்சு, இந்திய நீதிபதி
1948 – ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர்

இறப்புகள்

1933 – அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847)
1996 – பால் ஏர்டோசு, அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர் (பி. 1913)
2011 – புர்ஹானுத்தீன் ரப்பானி, ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவர் (பி. 1940)
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top