அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் மீட்டெடுப்பு.
அக்டோபர் 04, 2017
0
புதுக்கோட்டை அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது.சமூகவலைதள உதவிபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை மீட்டெடுத்து, சீரமைக்க, வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட சமூக வலைதள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, செப்., 29ல், வயலோகம் கிராமத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள், 60 பேர் ஒன்று திரண்டனர்.அவர்கள், சிதைந்த கோவிலை சுற்றி, மண்டிக் கிடந்த புதர்களை சுத்தம் செய்தனர். மூன்று நாட்கள்தொடர்ந்து, மூன்று நாட்கள் மண் மேடு, செடி கொடிகளை அகற்றி, சுத்தம் செய்தனர். அங்கிருந்த கல்வெட்டுகள் மூலம், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதும், மூன்றாம் குலோத்துங்கன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மன்னர்கள் காலத்தில், திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. கோபுரம், மடப்பள்ளி என, அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. அங்கிருந்த இரண்டு சிவலிங்கம், இரண்டு அம்மன் சிலைகள், ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலை, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தி சிலைகள் சேதமடையும் நிலையில் இருப்பதால், அவற்றை தனியே எடுத்து பாதுகாத்து வருவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். நடவடிக்கை வேண்டும்கோவிலை புனரமைக்கவும், அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற் சிலைகளை பாதுகாக்கவும், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க