பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில்
1,04,534 ஆண் வாக்காளர்களும்,
1,07,851 பெண் வாக்காளர்களும்,
1 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக
2,12,386 ஆக மொத்தம்
திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,21,228 ஆண் வாக்காளர்களும். 1,20,239 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,41,471, கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1,26,060 ஆண் வாக்காளர்களும், 1,29,292 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,55,352, பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,22,584 ஆண் வாக்காளர்களும், 1,25,433 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,48,026, திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,25,029 ஆண் வாக்காளர்களும், 1,29,404 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,54,433, தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,32,438 ஆண் வாக்காளர்களும், 1,41,158 பெண் வாக்காளர்களும், 36 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,73,632, ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,12,952 ஆண் வாக்காளர்களும். 1,17,963 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 230,916, பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,12,701 ஆண் வாக்காளர்களும், 1,21,715 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,34,438, பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1.04.534 ஆண் வாக்காளர்களும், 1,07,851 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2,12,386 ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,57,526 ஆண் வாக்காளர்களும், 9,93,055 பெண் வாக்காளர்களும், 73 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 19,50,654 ஆகும்.
மேலும், இன்று 03-10-2017 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2175 வாக்குச் சாவடி மையங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குசாவடி மையத்திற்கு (Booth) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற படிவம் 6- ஐ அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே 31-10-2017 வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 - ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் ஏதும் செய்யப்படவேண்டின், படிவம்-8 ஐ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டின், படிவம் 8A - ல் பூர்த்தி செய்து அளிக்கலாம்.
வருகிற 08-1-02017 மற்றும் 22-1-02017 ஆகிய இரு நாட்களும் சிறப்பு வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நடைபெறும். அம்முகாம் நாட்களில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தொடர்புடைய வாக்காளர்களிடமிருந்து கேட்புஉரிமம் மற்றும் ஆட்சேபணைகளை ( Claims and Objections ) உரிய படிவங்களில் பெற்றுக்கொள்ள ஆஜரில் இருப்பார்கள்.
இவ்வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டிலில் பிழையின்றி இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.