தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.
அக்டோபர் 13, 2017
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு சென்னையில் இன்று தொடங்கியது.
தீபாவளி சிறப்பு பேருந்துக்களுக்கு முன்பதிவு செய்வதற்கான சிறப்பு கவுண்டர்களை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை கோயேம்பேட்டில் இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கென சென்னையில் 29 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கனரக வாகனங்கள் மதியம் 2மணி முதல் இரவு 2மணி வரை நகருக்குள் வர அனுமதியில்லை என தெரிவித்த அமைச்சர், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப்பேருந்துகள் செல்வதற்காக தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், பொதுமக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க