பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொரறுப்பாளர் சீனி.கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச் செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான பெரியார் குறித்து அவதூறு பரப்பும் எச்.ராஜாவை கைது செய்யவேண்டும், ஆணவ படுகொலைகளைத் தடுக்க
தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
நன்றி:மெய்ச்சுடர்
பேராவூரணியில் தந்தைப் பெரியாரின் 44 வது நினைவு நாள்.
டிசம்பர் 25, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க