பேராவூரணி அருகிலுள்ள பூக்கொல்லையை சேர்ந்தவர் மஞ்சுளா (44). எல்.ஐ.சி முகவராக பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமையன்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு உள்ளே அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அன்று இரவு சுமார் 2 மணியளவில் முன்பக்க கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பண த்தையும் 6 பவுன் நகை மற்றும் சுமார் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் மஞ்சுளாவின் காரையும் கடத்த முயன்று ரிமோட் மூலம் கார் கதவை திறக்காமல், சாவி மூலம் திறந்ததால் எதிர்பாராத விதமாக கார் ஒலி எழுப்பியுள்ளது. சத்தம் கேட்டு வெளியில் வந்த மஞ்சுளாவை பார்த்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் குறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை.
டிசம்பர் 24, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க