சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையிலேயே இருந்தார். இதில் அதிமுக, திமுக,பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை கட்சிகள் பல்வேறு சின்னத்தில் நின்றன. இதில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 89013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து பேராவூரணியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பேராவூரணியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
டிசம்பர் 24, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க