ஜனவரி 12 (January 12) கிரிகோரியன் ஆண்டின் 12 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 353 (நெட்டாண்டுகளில் 354) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
475 – பசிலிஸ்கஸ் பைசண்டைன் பேரரசனாக முடி சூடினான்.
1528 – சுவீடனின் மன்னனாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினான்.
1539 – புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
1875 – சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான்.
1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1915 – அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
1918 – பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
1970 – நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1976 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
1992 – மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
2004 – உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
2006 – சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
2006 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2007 – மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது.
பிறப்புகள்
1863 – சுவாமி விவேகானந்தர் (இ. 1902)
1899 – போல் ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
1917 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகவாதி (இ. 2008)
1918 – சி. இராமச்சந்திரா, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1982)
1960 – டாமினீக் வில்கின்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1972 – பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி
இறப்புகள்
1976 – அகதா கிறிஸ்டி, ஆங்கில எழுத்தாளர் (பி. 1890)
2000 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல் தலைவர் (பி. 1920
2014 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
சிறப்பு நாள்
தான்சானியா: சான்சிபார் புரட்சி நாள் (1964)
இந்தியா: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)