வரலாற்றில் இன்று ஜனவரி 26.

Unknown
0
ஜனவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1340 – இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான்.
1500 – விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.
1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1565 – கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
1788 – ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
1837 – மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1841 – ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
1924 – சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1926 – ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
1949 – ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
1952 – பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.
1958 – ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
1980 – இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1983 – லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
1992 – ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.
2001 – குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
2006 – வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

பிறப்புகள்

1763 – காருல் யோவான், சுவீடன், நோர்வே மன்னர் (இ. 1844)
1878 – டேவ் நோர்ஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1948)
1921 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர், சோனி நிறுவனர் (இ. 1999)
1958 – எல்லேன் டிஜெனிரெஸ், அமெரிக்க நடிகை
1968 – ரவி தேஜா, இந்திய நடிகர்
1977 – வின்ஸ் கார்டர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
2008 – பால் ஆக்டோபஸ், ஆங்கிலேய சாக்குக்கணவாய் (இ. 2010)

இறப்புகள்

1823 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் (பி. 1749)
1891 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர், உள் எரி பொறி கண்டுபிடித்தவர் (பி. 1833)
1895 – கெய்லி, கணிதவியலர் (பி. 1821)
1961 – ஸடான் நிக்கொலஸ், ஆங்கிலேயெத் துடுப்பாளர் (பி. 1900)
1964 – தோமஸ் அடிகள், யாழ்ப்பாணம் தோலகட்டி ஆசிரம சுவாமிகள் (பி. 1886)
1990 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க வரலாற்றாளர் (பி. 1895)
2008 – ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
2015 – ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)

சிறப்பு நாள்

உலக சுங்கத்துறை தினம்
ஆஸ்திரேலியா – ஆஸ்திரேலியா நாள் (1788)
இந்தியா – குடியரசு நாள் (1950)
உகாண்டா – விடுதலை நாள்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top