தஞ்சாவூர் - சென்னை இடையே விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தஞ்சாவூர் விமானப்படை தளத்திலிருந்து சென்னை விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சையில் முதன் முறையாக விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. மேலும், உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஓசூர், சேலம், நெய்வேலியில் விமான சேவையைத் தொடங்குவதற்காக மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.