பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.
பிப்ரவரி 10, 2018
0
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி காவேரி இதய மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கான பிறவி இதயக்கோளாறு கண்டறிதல், பிறவி ஊனம், அன்னப்பிளவு கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர் ராஜன் இம்முகாமிற்கு தலைமை வகித்தார். திருச்சி காவேரி இதய மருத்துவமனை சிறப்பு இதய அறுவை சிகிச்சைடாக்டர்கள் ஆன்டோ சகாயராஜ், சரண்யா ஆகியோர் குழந்தைகளை பரிசோதித்தனர்.
டாக்டர்கள் தீபா, ரஞ்சித், சிவரஞ்சனி, கோகிலா, கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், மருந்தாளுநர் சரவணன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், ஒரத்தநாடு, மதுக்கூர், தாமரங்கோட்டை, பூவாணம் பகுதிகளை சேர்ந்த பள்ளிச்சிறார் நலத்திட்ட மருத்துவக்குழு மூலம், நோய் அறிகுறி கண்டறியப்பட்ட 150 குழந்தைகளுக்கு இம்முகாமில் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டதில், 52 குழந்தைகளுக்கு கோளாறு கண்டறியப்பட்டது. இதில் முதல்கட்டமாக 20 குழந்தைகள் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவச அறுவைசிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி காவேரி இதய மருத்துவமனை மக்கள் தொடர்புஅலுவலர் மாதவன் நன்றி கூறினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க