பேராவூரணியை அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் தமிழக அரசின் அம்மா திட்டசிறப்பு முகாம் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கை மனுக்களை வட்டாட்சியரிடம் அளித்தனர்.பின்னர் பின்னவாசல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்ச.நிஷானி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. கண் மருத்துவ நுட்பநர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய் தார். 4 பேர் கண்புரை அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். கிராம சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணியை அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் தமிழக அரசின் அம்மா திட்டசிறப்பு.
பிப்ரவரி 03, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க