திருச்சிற்றம்பலம்- வாட்டாத்திக்கோட்டை சாலை குண்டும் குழியுமான உள்ள சாலை சீரமைக்க கோரிக்கை.

Unknown
0
திருச்சிற்றம்பலத்தில் இருந்து வாட்டாத்திக் கோட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது.தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம் பலம் அண்ணாநகரில் இருந்து வாட்டாத்திக் கோட்டை வழியாக வா.கொல்லைக்காடு கடைவீதியை இணைக்கும் தார்ச்சாலை உள்ளது.இந்த சாலை வழியாகத்தான் மடத்திக்காடு, உப்புவிடுதி, செருவாவிடுதி வடக்கு, ஈச்சன்விடுதி, வாட் டாத்திக்கோட்டை, இடையாத்தி தெற்கு, வா.கொல்லைக்காடு ஆகியஊர்களுக்கு செல்ல வேண்டும்.இந்த சாலையில் எந்நேரமும் அதிகமான போக்குவரத்து இருக்கும். திருச்சிற்றம்பலத்தில் இருந்து வாட்டாத்திக்கோட்டை செல்லும் 7 கி.மீட்டர் தார்ச்சாலையும், உப்புவிடுதியில் இருந்து ஈச்சன்விடுதி செல்லும் 5 கி.மீட்டர் தார்ச்சாலையும் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகின்றன பொதுமக்கள் அவதி.

திருச்சிற்றம்பலம் வாட் டாத்திக்கோட்டை சாலை முக்கியமான இணைப்புச் சாலையாக இருப்பதால் அதிகமான விவசாயப் பணிகள் இந்த சாலையின்வழியாகத்தான் நடைபெறுகின்றன. இவை தவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தசாலையை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த தார்ச்சாலை முழுவதும் சேதமடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது.குறிப்பாக இரவு நேரங்களில் சிறுசிறு விபத்துகள் ஏற்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. எனவே, இனியும் தாமதமின்றி திருச்சிற்றம்பலம்- வாட்டாத்திக்கோட்டை சாலையையும், உப்புவிடுதியில் இருந்து ஈச்சன்விடுதி செல்லும் தார்ச்சாலையையும் செப்பனிட்டு தர வேண்டுமென சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.



 

நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top