திருவாரூரில் மிக பழமையான தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. சைவ தலங்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற மற்றும் பஞ்சபூத தலங்களில் மண் தலமாகவும் உள்ளது.
ஆசியாவிலேயே மிக பெரியது என்ற பெருமை பெற்ற ஆழித்தேர் இக்கோயிலின் தேராகும். இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவில்கலந்துகொள்ளும்பக்தர்கள் மற்றும்பொதுமக்கள்தேரினைகோயிலைசுற்றிஉள்ளவீதிகளின் வழியே பக்தி பரவசத்துடன்இழுத்துவருவார்கள்.