பேராவூரணி பேரூராட்சி ஆத்தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாண வர் ஒருவரின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளி க்கிழமை நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி பெற்றோர் - ஆசி ரியர் கழகத்தலைவரும், பேரூ ராட்சி முன்னாள் தலைவருமான எம்.ஏ. இளஞ்செழியன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயாஞ்சலி அனை வரையும் வரவேற்றார். திமுக இளைஞர் அணி அமைப்பாளர் தென்னங்குடி ஆர்.ராஜா மரக்கன்றுகளை நட்டார்.கல்விக்குழு தலைவரும் பேரூராட்சி முன்னாள் உறுப்பினருமான மணி ரவி,பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் ராஜே ஸ்வரி செந்தில்நாதன், முருகையன், வீரமணி, ராஜேந்திரன், ப.குழந்தைவேலு, ராதாகிருஷ்ணன், சீனிவாசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மரக்க ன்றுகளை வழங்கிய மாணவர் விபீஷ்ண னின் தந்தை மகேந்திரன் நன்றி கூறினார்.
பேராவூரணி அடுத்த ஆத்தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா.
ஜூன் 30, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க